'உணவு தன்னாதிக்கததை பாதுகாப்பதற்காக பூமி நீர்
மற்றும் விதைகளுக்கான மக்கள் உரிமையை உறுதிப்படுத்துக' என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 9-10-2012 முதல் 16-10-2012 முதல் அனுஸ்டிக்கப்படவுள்ள காணி கொள்ளைக்கு
எதிரான தேசிய எதிர்ப்பு வாரம் தொடர்பாக
ஊடகவியலாளர்களுக்குவி;ளக்கமளிக்கும் கூட்டம் இன்று மாலை நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பின் காரியாலயத்தில் இடம் பெற்றது.
ஊடகவியலாளர்களுக்குவி;ளக்கமளிக்கும் கூட்டம் இன்று மாலை நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பின் காரியாலயத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில்
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ஹேர்மன் குமார, அகில இலங்கை மீனவ சமூக தொழிற் சங்கத்தின்
தலைவர் அருண ரொசாந்த, ஸ்ரீ விமுக்தி மீனவ
பெண்கள் அமைப்பின் உறுப்பினர் ஸ்ரீயானி பெர்னாந்து, களப்பு மீனவ
அமைப்பின் தலைவர் மாகஸ் பெர்னாந்து, தேசிய மீனவ
ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் நாலக ரொஸயிரோ, ஸ்ரீ விமுக்தி
மீனவ பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் சுபாசினி ஆகியோர் இது தொடர்பாக கருத்துக்களை
தெரிவித்தனர்.
காணி கொள்ளைக்கு
எதிரான தேசிய எதிர்ப்பு வாரத்தின் போது பல்வேறு மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ள
கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள, எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அங்கு எடுத்துரைக்கபட்டது.
No comments:
Post a Comment