Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, December 10, 2013

நீர்கொழும்பு மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் ஏகமானதாக நிறைவேற்றம்

நீர்கொழும்பு மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.


ஆளும் தரப்பினருடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஒன்பது பேரும் > முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் வரவு வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கை ஏகமானதாக நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார்.

அதற்கு முன்னதாக, மாநகர மேயர் அன்டனி ஜயவீர சபையில் வரவு செலவுத்திட்ட அறிக்கையை சமர்பித்ததை தொடர்ந்து ஆளும் தரப்பினரும் எதிர்தரப்பினரான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்ட அறிக்கை தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்தனர். இதன் போது சில உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. குறிப்பாக பிரதி மேயர் சகாவுல்லாஹ்வுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சஜித் மோகனுக்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.  மாநகர சபை  உறுப்பினர் சஜித் மோகன் ஆளும் கட்சி முக்கியஸ்த்தர்களிடம் பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு  இங்கு எதிர்த்து பேசி நாடகமாடுவதாக பிரதி மேயர் சகாவுல்லாஹ் குற்றச்சாட்டு தெரிவித்தார். உறுப்பினர் சஜித் மோகன் தமிழிலிலும் சிங்களத்திலும் இங்கு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சபை அமர்வின் பின்னர் வரவு செலவுத்திட்ட அறிக்கை தொடர்பில். மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும் . ஐக்கிய தேசியக் கட்சியின் நீரகொழும்பு பிரதான அமைப்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


ஆளும் தரப்பனர் இந்த வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க இரகசிய திட்டம் தீட்டியிருந்தனர். அதன் பின்னர் மேயர் பதவிக்கு உறுப்பினர் ஒருவரை நியமிக்க தி;ட்டமிட்டிருந்தனர். அந்த உறுப்பினரைவிட தற்போதைய மேயர்  பொருத்தமானவர் என எமது கட்சி  உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்தோம். அதன்படி வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று அவர் கருத்து தெரிவித்தார். 





No comments:

Post a Comment