விலங்குப் பண்ணை என்ற போர்வையில் பாரிய அளவில் கசிப்பு
தயாரித்து வந்த நபர் ஒருவருக்கு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த (20-4-2017) வியாழக்கிழமை இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா
அபராதம் விதித்தார்.
கட்டானை, களுவரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த அச்சில
மதுசங்க என்பவருக்கே நீதவான் மேற்படி தண்டப் பணத் தொகையை விதித்தார்.
நீர்கொழும்பு, குரணை பிரதேசத்தில், கொழும்பு வீதிக்கு
அருகில் விலங்குப் பண்ணை என்ற போர்வையில் பாரிய அளவில் கசிப்பு தயாரிக்கப்படுவதாக
கிடைத்த தகவலை அடுத்து நீர்கொழும்பு ஊழல் ஒழிப்புப் பிரிவு பொலிஸார் சுற்றிவளைப்பை
மேற்கொண்டனர்.
இதன்போது 75 கசிப்பு போத்தல்களையும், 7 கோடா
பரல்களையும், கசிப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தபட்டு வந்த உபகரணங்களையும்
பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை மன்றில் ஆஜர் செய்த போதே நீதவான் இரண்டு
இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்
விதித்தார்.

No comments:
Post a Comment