Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, April 19, 2017

தாதியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்



நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும்  தாதியர்களின் ஆளணி குறைப்பாட்டை நீக்குமாறு கோரி இன்று புதன்கிழமை நண்பகல்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை வைத்தியசாலை முன்பாக தாதியர்கள் நடத்தினர்.
 அமைதியான முறையில் நடந்த இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தாதியர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பான சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு பௌதீக குறைபாடுகளுக்கு மத்தியில்  தாஙகள் பணியாற்றுவதாகவும், டெங்கு வார்ட்டில் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து காணப்படுவதாகவும்,
பலவேறு பிரதேசஙகளிலும் உள்ள நோயாளிகள் நீர்கொழுமபு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதன் காரணமாக தாதியர்களி எண்ணிக்கையை  அதிகரிக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் நிலன்தி  பத்திரனவிடம் வினவிய போது வைத்தியசாலையில் தற்போது 327 தாதியர்கள் பணியாற்றுவதாகவும் மேலும் 50 தாதியர்களின் தேவை இருப்பதாகவும் தெரிவித்தார்.

  

No comments:

Post a Comment