Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, April 22, 2017

நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் நீர்கொழும்பில் நடைபெற்ற தமிழ், சிங்கள புத்தாண்டு விழா விளையாட்டுப் போட்டிகள்

மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில்  தமிழ், சிங்கள புத்தாண் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்று சனிக்கிழமை (22-4-2017)  நீர்கொழும்பில் நடைபெற்றது.
 நீர்கொழும்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து செத் சரண அமைப்பு, கொழும்பு கரிடாஸ் அமைப்பு  ஆகியன இணைந்து இந்த புத்தாண்டு விழாவை நீர்கொழும்பு கொட்டுவ மைதானத்தில் நடத்தின.
இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், செத் சரண அமைப்பு, கொழும்பு கரிடாஸ் அமைப்பு  ஆகியவற்றின் முக்கியஸ்த்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 சகல மதங்களையும் சேர்ந்த அறநெறி பாடசாலை மாணவர்கள் புத்தாண்டு; விழா விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றினர்.   மாணவர்கள் பங்குபற்றிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்





















No comments:

Post a Comment