இலங்கை
அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் நீர்கொழும்பு கிளை அமைப்பின் ஏற்பாட்டில் 'சீரத்துன் நபி' தின நிகழ்வு (நபிபெருமானார் தின
நிகழ்வு) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம்
ஜமாஅத் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
நீர்கொழும்பு
ஜமாஅத்தின் தலைவர் எம்.ஜி. முஸ்தாக் சாஹிப்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மௌலவி ஏ.பி.
முஸ்தாக் , முரப்பி அஸ்மத் அஹ்மத், முரப்பி எம். தாஹிர் அஹ்மத் ஆகியோர் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தொடர்பாக பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றினர்.
நிகழ்வில்
அரபி கஸீதா, உர்து நஸம் என்பனவும் இடம்பெற்றன.
நீர்கொழும்பு
கிளை ஜமாத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான
ஆண்கள் , பெண்கள் நிகழ்வில் பங்குபற்றினர்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment