நீர்;கொழும்பு வைத்தியசாலையின்
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான
கைதி ஒருவரின் பல்லை மாற்றிக் கழற்றிய சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில்
இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் கடந்த ஜுலை மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
மெல்கம் டிரோன் என்ற கைதியின் பல்லே மாற்றிக் கழற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது.
குறித்த கைதி தனது பாதிக்கப்பட்ட பல்லை கழற்றுவதற்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி நீர்;கொழும்பு வைத்தியசாலைக்கு
அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவரது பாதிக்கப்பட்ட பல்லுக்கு பதிலாக அருகில்
உள்ள பாதிக்கப்படாத பல் வைத்தியரினால் கழற்றப்பட்டுள்ளது.
பின்னர் இது தொடர்பாக அந்த கைதி சிறைச்சாலை வைத்தியரிடம் காண்பித்துள்ளார்.
அடுத்த நாள் 26 ஆம் திகதி நீர்;கொழும்பு வைத்தியசாலை கைதி
அழைத்து வரப்பட்ட போதும் தனது பாதிக்கப்பட்ட பல்லை கழற்ற அவர் அனுமதிக்கவில்லை.
இதனை தொடர்ந்து குறித்த கைதியின்
சார்பில் இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழவிடம் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இதன் பிறகு நேற்று சனிக்கிழமை பாதிக்கப்பட்ட கைதி நீர்கொழும்பு
வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு அவரது பாதிக்கப்பட்ட பல் கழற்றப்பட்டது.
No comments:
Post a Comment