நீர்கொழும்பு மேயர் அன்ரனி
ஜயவீரவுக்கு தொலைபேசி மூலமாக மரண
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு நீதவான்
நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீர்கொழும்பு பிரதான நீதவான்
பூர்ணிமா பரணகமகே கடந்த புதன்கிழமை (27) உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு , தூவ பிரதேசத்தைச் சேர்ந்த அன்ரனி ரொமிலஸ் குரேரா
என்பவரே விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.
சந்தேக நபர்; இந்த மாதம் 22 ஆம் திகதி; நீர்கொழும்பு மேயரின் கையடக்க
தொலைபேசிக்கு அழைப்பை எடுத்து மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு - கொழும்பு பிரதான
வீதியில் கட்டிடமொன்றின் காணியில் அருகில்
உள்ள கராஜ் ஒன்றுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மண் நிறைத்தமை தொடர்பாக
மேயருக்கு எழுத்து மூலம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு மேயர் நடவடிக்கை எடுத்தமை தொடர்பாகவே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக
மேயர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment