நீர்கொழும்பு
கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் உள்ள
பட்டாசு தொழிறசாலையில் கடந்த திங்கட்கிழமை (25) ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த இன்னொரு நபரும் கடந்த முன்தினம் புதன் கிழமை (27) மரணமடைந்தார்.
இச்சம்பவத்தின் காரணமாக
இதுவரை இரண்டு பேர் இறந்துள்ளனர். மேலும் ஒருவர் கடும் தீக்காயங்களுடன் கொழும்பு
தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவின்ன வீதி,கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த
பந்துல ரத்னசிறி (48 வயது) என்பவரே இரண்டாவதாக மரணமடைந்தவராவார். இவர்
சம்பவம் இடம்பெற்ற அந்த பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளராவார். இச்சம்பவத்தில்
காயமடைந்த கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச்
சேர்ந்த பீட்டர் பொன்சேகா (56 வயது) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை
(26) மரணமடைந்தார்.
இந்நிலையில், அக்கரபணஹ பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்சன நிலங்க (22 வயது) என்ற இளைஞர் கொழும்பு தேசிய வைத்திசாலையில் தொடர்ந்து சிகிச்சைப்
பெற்று வருகிறார்.
விபத்து ஏற்பட்டவுடன்
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில்
ஒருவரே மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கம்பி நிலாக்கூறு
தயாரிப்பின் போது இந்த தீ விபத்து
ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment