Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, August 26, 2014

நீர்கொழும்பு மேயருக்கு தொலைபேசி மூலமாக மரண அச்சுறுத்தல்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தனக்கு தொலைபேசி மூலமாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக  நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர  இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் தெரிவித்தார். இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  மேயர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.26 மணியளவில்
எனது கையடக்க தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. அழைப்பை எடுத்தவரின் அருகில் இருந்த ஒருவர் எனக்கு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுத்தார்.
இவ்வாறு ஏழு தடைவைகள் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.



 இது தொடர்பாக நான் ஆராய்ந்த போது நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் உள்ள வாகன பழுது பார்க்கும் கராஜ் ஒன்றின் உரிமையாளரான எக்னஸ் என்ற பெண்மனி எனக்கு கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி  எழுத்து மூலமாக முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.  அவரது கராஜ் அருகில் கட்டிடம் ஒன்றை கட்டிக் கொண்டிருக்கும் திசேரா என்பவர் அவரது காணியையும் வீதியையும் சமாந்தரமாக்கும் வகையில் மண் இட்டு நிரப்பியுள்ளதாகவும், இதன் காரணமாக  மழை நீர் தனது வியாபார நிலையத்தில் நிறைவதாகவும்,இடையூராக இருப்பதாகவும் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்குமாறும்; அவரது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தார். இதனை அடுத்து நான் அதிகாரிகளை  அதனை பார்வியிடச் செய்து  உரிய காணியில் நிரப்பப்பட்டுள்ளன மேலதிக மண்ணை அகற்றுமாறு எம்.கே. டி. திசேரா எனபவருக்கு எழுத்து மூலமாக அறிவித்தேன.; ஆயினும் அவர் அதனை செய்யவில்லை. இதன் காரணமாக நகர சபை ஊழியர்களை கொண்டு அந்த மண்ணை அகற்ற நான் நடவடிக்கை எடுத்தேன் . இது தொடர்பாக பிரதேசவாசிகள்; என்னை சந்தித்த போது தெளிவுபடுத்தியதுடன் அவர்களது வீதியை புனரமைத்து தருவதாகவும் கூறினேன்;.

எனக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் ஆரம்பத்தில் இதனை குறிப்பிட்டனர். நான் 40 வருட காலம் அரசியலில் இருப்பவன். 23 வருட காலம் மாநகர சபை உறுப்பினராக இருந்தவன். எனது பதவியிலிருந்து அகற்றுவதற்காகவே இது போன்ற அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக உணர்கிறேன். தற்போது சில தரப்பினர் மூலமாக அச்சுறுத்தல் விடுத்தவர்கள் என்னோடு சமாதானம் பேச வருகின்றனர்.
இந்த அச்சுறுத்தல் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முஐறப்பாடு செய்துமுள்ளளேன். எனக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களின்  தொலைபேசி இலக்கத்தை ஆராய்ந்த பொலிஸார் அதனை பயன்படுத்தியவர்களை அடையாளம் கண்டுள்ளனர். தலவில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அதனை பயன்படுத்தி வருகிறார். பொலிஸார் விரைவில் அந்த இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தவுள்ளனர்.
நான் மீனவ குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்து இந்த நிலையை அடைந்தவன்.  அதிகார பலமற்ற சிறிய குடும்பம் ஒன்றில் இருந்து வந்ததன் காரணமாகவா எனக்கு இது போன்று அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது?. இதற்கு முன்னர் இருந்த மேயர்களுக்கு இது போன்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்படவில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் இருவரும்  பல்வேறு குற்றச் செயல்;களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் ஆவர். நீர்கொழும்பு நகரில் இது போன்ற குற்றவாளிகளுக்கு இடமளிக்க முடியாது என்றார்.

      

No comments:

Post a Comment