கிணற்றில் குதித்து
இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து
கொண்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்
ஞாயிற்றுக்கிழமை (24) கிம்புலாபிட்டிய பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.
கிம்புலாபிட்டிய, மீகொல்ல,
இத்தகொல்ல
பிரதேசத்தைச் சேர்ந்த தசநாயக்க முதியானசலாகே கீத் மதுசங்க என்ற 22 வயதுடைய இளைஞனே தற்கொலை
செய்து கொண்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
குறித்த இளைஞன் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில்
உள்ள தொழிற்சாலையொன்றில் தொழில் புரிபவராவார்.கோவின்ன பிரதேசத்தில் தங்கியிருந்து
தொழில் செய்து வந்த இவர் மூன்று மாதங்களுக்கு ஒரு தடைவை தனது வீட்டுக்கு சென்று
வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தொழிலிலிருந்து விலகி கிம்புலாபிட்டிய
பிரதேசத்தில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியுள்ளார். 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
குறித்த இளைஞர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். திரும்பவும் அவர் வீடு வராததை கண்டு குடும்பத்தினர்
தேடியுள்ளனர். இதன் போது அவரது கட்டிலின் மெத்தையின் கீழ் இளைஞர் எழுதி வைத்ததாகக்
கருதப்படும் கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்
கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் கிணற்றில் பாய்ந்து தற்கொலை
செய்து கொள்ளவுள்ளதாக அவர் எழுத வைத்துள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் அங்கு
சென்று பார்த்தபோது கிணற்றில் சடலம்
இருக்கவில்லை.
இந்நிலையில,;
அடுத்த நாள்
ஞாயிற்றுக்கிழமை (24) காலை பிரதேசதi;தச் சேர்ந்த வியாபாரி ஒருவர்
தேவாலய கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது சடலம் ஒன்று கிணற்றில் இருப்பதை
கண்டுள்ளார். இதனை அடுத்து பொலிஸாருக்கு
இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு விசேட சட்ட
வைத்திய அதிகாரி மேற்கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் கிணற்றில் மூழ்கி , முச்சுத்திணறி சுவாசிக்க முடியாமையினால்
ஏற்பட்ட மரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment