நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில்
கட்டுவை பிரதேசத்தில் எரிவாயு விற்பனை நிலையம் அருகில் உள்ள வீதியில் புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ள
பாலம் தொடர்பாக பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த பாலம் உடைந்து மூன்று வருட காலத்தின் பின்னர்
குறித்த பாலம் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 24 இலட்சம் ரூபா செலவில் மேல்
மாகாண அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆயினும்,
முழுமையாக புனரமைப்பு
செய்யப்படாததன் காரணமாக பிரதேசவாசிகள் பல்வேறு வகையிலும்
பாதிக்கப்பட்டுள்ளதாக
குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரதேசவாசிகள் தெரிவிக்கையில்,
இந்த பகுதியில் 15 வீடுகள் உள்ளன. 20 இற்கும் மேற்பட்ட
குடும்பங்கள் வசிக்கின்றன. பாலம் உடைந்து மூன்று வருடங்களின்; பின்னர் எமது பலத்த
முயற்சியின் பயனாக மேல் மாகாண சபை
உறுப்பினர் ஷாபி ரஹீமின் உதவியினால் இந்த
பாலம் 24 இலட்சம் ரூபா செலவில்
புனரமைப்பு செய்யப்பட்டது. ஆயினும், இந்தப் பாலம் முழுமையாக
புனரமைப்பு செய்யப்படவில்லை.
இதற்கு முன்னர் இருந்த பாலத்தின் மூலம் பாலத்தின் இருபக்கமாகவும் உள்ள
வீடுகளுக்கு வாகனங்களில் பயணிக்க முடியும். தற்போது வாகனங்களை அவ்வாறு கொண்டு
செல்ல முடியாது. பாலம் முழுமைபடுத்தப்படாமையே காரணமாகும். இதன் காரணமாக கடந்த
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பிரதேசத்தில் உள்ளவர்கள் தமது முச்சக்கர வண்டி, கார் போன்ற வாகனங்களை
பாலத்திற்கு அருகில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன். இந்த பாலத்தின் இரண்டு பக்க சட்ட வேலிகளும் அரை குறையாக நிர்மானிக்கப்பட்டுள்ளன.
இதன் வழியாக சிறுவர்கள் தண்ணீரில் விழக் கூடிய வாய்ப்பு அதிகமாகும். அத்துடன்
பாலத்தின் கீழ் பகுதியில் ஒடும் ஓடை
(தெபாஎல) வழியாக வரும் பிளாஸ்ரிக் போத்தல்
கழிவுகள் , தண்ணீர் தாவரங்கள் மற்றும்
ஏனைய கழிவுகள் பாலத்தின் கீழ் உள்ள இரும்பு சட்டத்தில் சிக்கியும் தேங்கியும்
நிற்பதன் காரணமாக இந்தப் பகுதி நுளம்பு
பெருகும் இடமாகவும், சுகாதாரமற்ற இடமாகவும்
உள்ளது. கழிவுகள் தேங்கி நிற்பதன் காரணமாக
தண்ணீர் ஓட்டம் தபைட்டு பலத்த மழை
பெய்யும் காலங்களில் ஓடை
பெருக்கெடுக்கிறது. இதனால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுகிறது.
இந்தப் பாலம் நிர்மானிக்கப்படும் போது
நில மட்டத்திற்கு மேலாக கட்டப்பட்டதன் காரணமாக வாகனங்கள் பயணிக்க முடியாமல் போகும் என்பதை நாம் சுட்டிக்காட்;டியதை அடுத்து அதன் ஒரு பகுதி
உடைக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது. அதேபோன்று,
பாலத்தின் ஏனைய குறைபாடுகள்
தொடர்பாக பாலத்தை நிர்மானித்த இன்ஜினியரிடம் நாம் முறையிட்டோம். பாலத்தின் இரு
பக்கமாகவும் வாகனங்கள் பயணிக்கக் கூடியவிதமாக முழுமைப்படுத்தி தருவதாக அவர்
குறிப்பிட்ட போதும் அவ்வாறு நடைபெறவில்லை.
இந்தப் பாலத்தின் குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே
பிரதேசவாசிகளின் கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment