நீர்கொழும்பு பிட்டிபனை கடற்பகுதியில் இருந்து சிறிய படகொன்றில்
மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் கடந்த
திங்கடகிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
நீர்;கொழும்பு வடக்கு பிட்டிபனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான
அமரசிங்ககே கிறிஸ்தோபர் போல் சில்வா என்ற மீனவரே கடலில் மீன் பிடிக்கச் சென்ற
நிலையில் காணாமல் போனவராவார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
கடந்த திங்கட்கிழமை (11 ) அதிகாலை 5.30 மணியளவில் காணாமல் போன மீனவர் சிறிய படகொன்றில் மீன் பிடிக்க தனியாகச் சென்றுள்ளார். இவ்வாறு செல்பவர் வழமையாக அன்றைய
தினம் மாலை ஐந்து அல்லது ஐந்து முப்பது மணியளவில் திரும்புவது வழக்கமாகும்.
ஆயினும்> அன்றைய தினம் அவர் வீடு திரும்பாததை அடுத்து குடும்பத்தவர்கள் இது தொடர்பாக
கடற்படைக்கு அறிவித்துள்ளனர்.
அதனை அடுத்து கடற்படையினரின்; டோரா படகும் மீனவப் படகுகளும்
தேடிய போது பிட்டிபனை மோயகட்டவுக்கு மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் கம்மல்துறை
கடற்பகுதியில் படகும் இன்ஜினும் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
புயல் காற்றில் அகப்பட்டு படகு
கவிழ்ந்து மீனவர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
காணாமல் போன மீனவரை கடற்படைப் படகுகளும் மீனவப் படகுகளும் தேடும் பணியில்
ஈடுபட்டுள்ளன.
No comments:
Post a Comment