Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, August 7, 2014

நீர்கொழும்பில் அறவிடப்படும் அதிகரித்த வரிப் பணத் தொகையை குறைப்பதற்கு மாநகர சபையில் பிரேரணை சமர்பிப்பு

நீர்கொழும்பு மாநகர சபையினால்   இந்த வருடம் முதல் அறவிடப்படும் அதிகரித்த வரிப் பணத் தொகையை  குறைப்பதற்கு நேற்று வியாழக்கிழமை மாநகர சபையில் பிரேரணை சமர்பிக்கப்பட்டது.
வரிப் பணத் தொகையை  குறைப்பதற்கான விசேட பிரேரணையை நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர சமர்பித்தார். அதனை எதிர்கட்சித் தலைவர் கெலிசன் ஜயகொடி வழிமொழிந்தார்.
நேற்றைய தினம் மாநகர சபையின் ஆகஸ்ட் மாத அமர்வு இடம்பெற்ற போதே விசேட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு சபையில்
ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது அனுமதிக்காக மாகாண சபைக்கு அனுப்பப்படவுள்ளது. 


புதிய வரி அறவீட்டின் அடிப்படையில் வீடுகளுக்கு அறவிடும் 7 சத வீத வரிக்கட்டணத்தை 5 வீதமாகவும், வியாபார நிலையங்களுக்கு அறவிடும் வரிக்கட்டணத்தை 16 சத வீதத்திலிருந்து 13 வீதமாகவும் குறைப்பதற்கு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

உள்ளு10ராட்சி மன்ற சட்ட வல்லுனர்களின் ஆலோசனைப் பெற்று இந்த வரி குறைப்பு பிரேரணையை  சமர்ப்பிப்பதாகவும், இந்த வருடம் இந்த வரி குறைப்பை செய்யவுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டுக்கான அதிகரித்த வரியை செலுத்தியவர்களுக்கு 2015 ஆம் ஆண்டில், அவர்கள் செலுத்த வேண்டிய வரி அறவீட்டின் போது,  அதிகரித்த கட்டணத்தை கழித்து வரி அறிவிடப்படும் எனவும் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேயர் அன்ரனி ஜயவீர குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment