நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை மற்றும்
வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில்; கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மேல்
மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும்,
ஐக்கிய தேசியக்
கட்சியின் நீர்கொழும்ப தேர்தல் தொகுதி அமைப்பாளருமான ரொயிஸ் விஜித்த
பெர்னாந்துவை எதிர்வரும் செப்டம்பர் மாதம்
20 ஆம் திகதி
வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர்
இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள பிணை கோரிக்கை
இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்பட்ட போதே
சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவின்
சார்பில் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவும், முறைப்பாட்டாளர்; சார்பில் அரச
சட்டத்தரணி சிஹான் டி சில்வாவும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரான
தரிந்து கொஸ்தாவுக்கு பொலிஸார் பிணை வழங்கியுள்ளதாகவும்,
ஏனைய சநதேக நபர்களை
கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும்
புpரதிவாதியான ரொயிஸ் விஜித்த
பெர்னாந்துவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி
மைத்திரி குணரத்ன மன்றில் குறிப்பிட்டார்.
தரிந்து கொஸ்தா வழங்கியுள்ள தகவலின்
அடிப்படையில் சந்தேக நபர்கள் நால்வரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதற்கு
சாட்சிகள் உள்ளன எனவும், சந்தேக நபர்களினால்
மேற்கொள்ளப்பட்ட தொலை பேசி உரையாடல்களும், சாட்சியின் வாக்கு மூலமும்
பொருந்துகிறது எனவும் குறிப்பிட்ட அரச
சட்டத்தரணி சிஹான் டி சில்வா, விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு
தெரிவித்தார்.
எத்தகைய சாட்சிகள் இருப்பினும் அது
சந்தேக நபர் ஒருவருக்கு பிணை வழங்க தடையாக இருக்க முடியாது என்று
சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் குறிப்பிட்டார்.
இரு தரப்பு சட்டத்தரணிகளினதும் வாதப் பிரதிவாதங்களின் பிறகு, இந்த வழக்கை செப்டம்பர் மாதம்
2 ஆம் திகதி வரை நீதவான் ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment