நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள
வெளிநாட்டு நாணயமாற்று நிலையம் மற்றும் நகை கடையொன்றில் ஆயுதமுனையில் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம்
கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து மரணமடைந்த தனது தாயாருக்கு இன்று இறுதி மரியாதை
செலுத்தினார்.
நீர்கொழும்பு , குரணையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து
தாயாரின் பூதவுடல் வைக்ப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ள
நிலையில் பிற்பகல் 1.45 மணியளவில் பலத்த
பாதுகாப்பின் மத்தியில் அவர் அழைத்து வரப்பட்டார். குறுகிய நேரம் இதற்காக அவருக்கு
அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ரொயிஸ் விஜித்த பெர்னாந்து தாயார் கடந்த சனிக்கிழமை (30) இரவு காலமானார். இறக்கும்
போது அவரது வயது 85 ஆகும்.
மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஐக்கிய தேசியக்
கட்சியின் சாரபில்; மேல் மாகாண சபையில் கம்பஹா மாவட்டத்தில்
போட்டியிட்டு 29 ஆயிரத்து 291 விருப்பு வாக்குகளைப் பெற்று
கம்பஹா மாவட்டத்தில் ஆறாவது இடத்தைப் பெற்றவராவார். இவர் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஐக்கிய
தேசியக் கட்சி; பிரதான அமைப்பாளரும்.
நீர்கொழும்பு மாநகர
சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவருமாவார்.
No comments:
Post a Comment