மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியிக் கட்சி உறுப்பினர்கள்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை (14) விஜயம் செய்து வைத்தியசாலையின் குறைபாடுகளை
பார்வையிட்டதுடன் இது தொடர்பாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம்
இதற்கான காரண்ங்களை வினவினர்.
மேல் மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் மஞ்சுசிறி அரங்கல
தலைமையில் வருகைத் தந்த மேல் மாகாண சபையின்
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான ஹசீன் ராஜ கருணா (எதிர்கட்சியின்
பிரதான அமைப்பாளர்), முஜீபுர் ரஹமான், எஸ் எம். மரிக்கார், சிறிநாத் பெரேரா, வைத்தியர். கவிந்த ஜயவர்தன,
சட்டத்தரணி ரோஸ்
பெர்னாந்து, இப்திகார் ஜமீல் மரிக்கார்,
ஜோர்ஜ் பெரேரா, அனுராத விமலரத்ன,
உதார ரத்னாயக்க,
லெனாட் கருணாரத்ன,
ஆகியோரே
வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிய வருகைத் தந்தவர்களாவர்.
இக்குழுவினர் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர்
சம்பா அளுத் வீரவை அவரது காரியாலயத்தில் சந்தித்து வைத்தியசாலையின்
குறைபாடுகளுக்கான காரணங்களையும் அவற்றை
நீக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதலில் வினவினர்.
வைத்தியசாலையில் 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஏழு
மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத்தில் நிலவும் நீர் கசிவு,
குறைபாடுடடைய மின்சார
கட்டமைப்பு, போதிய வசதிகள் இல்லாமை தொடர்பாகவும்,
வைத்தியசாலையின் பிரேத
அறையில் உள்ள குறைபாடுகள், ஓளெடத களஞ்சிய வசதிகள் தொடர்பான குறைபாடுகள்,
ஆளணி தொடர்பான
குறைபாடுகள் , வடிகான் மற்றும் மலசல கழிவகற்றல் தொடர்பான பிரச்சினைகள்
தொடர்பாகவும் வைத்திய அதிகாரியிடம் மாகாண
சபை உறுப்பினர்களால் அங்கு வினவப்;பட்டது.
இதன் போது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பதிலளிக்கையில்,
வைத்தியசாலை தினமும்
நான்காயிரம் பேரால் (நோயாளிகள், சிகிச்சை பெற வருவோர்,
ஊழியர்கள்,
பார்வையிட வருவோர்)
பயன்படுத்துகின்றனர். வெளிநோயாளர் பிரிவில் தினமுமம் 1800 முதல் 1900 பேர் வரை சிகிச்சைக்காக
வருகின்றனர். புதிய கட்டிடத்தில் நீர் ஒழுக்கு, கொங்ரீட் பழுதடைதல்,
மற்றும்
மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.
மொரட்டுவை பல்கலைக் கழக பேராசிரியர் குழுவினர் புதிய கட்டிடத்தின் கொங்ரீட்டின்
நிலைமை தொடர்பாக இன்னும் ஒரு மாத
காலத்தில் முதலாவது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளனர். இரண்டாவது அறிக்கை ஆறு மாத
காலத்தில் கிடைக்கவுள்ளது. குறைபாடுடைய மாடிக் கட்டிடத்திற்கு பதிலாக புதிய
கட்டிடம் ஒன்றின் தேவை அறியப்பட்டுள்ளது.
இதற்காக இந்த வருடம் 400 மில்லியன் ரூபா அரசாஙகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக
அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.
வைத்திய அதிகாரியின் சந்திப்பின் பின்னர் மாகாண சபை
உறுப்பினர்கள் வைத்தியசாலையின் மாடிக் கட்டிடத்திற்கு விஜயம் செய்து குறைபாடுகளை
கண்டறிந்து கொண்டதுடன் நோயாளிகளிடமும் இது தொடர்பாக விசாரித்தனர்.
No comments:
Post a Comment