நீர்கொழும்பு நகை கடையில் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மடிக்
கணனி என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இன்று சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிய
வருகிறது.
நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 'ஸ்டார் கோல்ட் ஹவுஸ்' என்ற நகைகடையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளரின் மைத்துனர் தெரிவிக்கையில்.
நேற்று வெள்ளிக்கிழமை (3)
இரவு 7.30 மணியளவில் கடை மூடப்பட்டது.
அதன் பின்னரே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு வேளையில்
திருட்டு இடம்பெற்றிருக்கலாம் என நினைக்கிறோம். கடையின் மேல் மாடி வழியாக நுழைந்து. அல்லது மேல் மாடியில் உள்ள யன்னலை திறந்து உள்ளே நுழைந்து திருட்டு இடம்பெற்றிருக்கலாம்
என கருதுகிறோம். தங்கம் மூன்று அல்லது நான்கு பவுண்,
வெள்ளி 500 கிராம்,
இரண்டு மடிக் கணனிகள்
உட்பட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவு போயுள்ளன. கடையில் இருந்த
பாதுகாப்புப் பெட்டகத்தை திருடர்களால்
திறக்க முடியாமல் போனதன் காரணமாக பெரும் எண்ணிக்கையான நகைகள் களவு போனது
தவிர்க்கப்பட்டுள்ளது. கடையில் இருந்த
நான்கு இலாட்சிகள் உடைக்கப்பட்டே திருடப்பட்டுள்ளன . இச்சம்பவம் தொடர்பாக
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்.
இதேவேளை, இன்று முற்பகல் நீர்கொழும்பு
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதுடன் சம்பவ இடத்தையும்
ஆராய்ந்தனர்.
No comments:
Post a Comment