இன்று காலை இலங்கை வருகைதந்த பரிசுத்த
பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தையை
வரவேற்பதற்கு கட்டுநாயக்க முதல் கொழும்பு
வரையான வீதிகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள்
அதிகாலை முதல் காத்திருந்தனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் சுற்றுவட்டத்திலும்;
கட்டுநாயக்க 18 ஆம் கட்டை பகுதியிலும் பெரும் எண்ணிக்கையானோர் வீதியின் இரு
மருங்குகளிலும் காத்திருந்தனர். இவர்களில் சிலாபம், புத்தளம் உட்பட தூர
இடங்களிலிருந்து வருகை தந்திருந்த பெரும்
எண்ணிக்கையானோரையும், சுதந்திர வர்த்க வலய ஆடை தொழிற்சாலை ஊழியர்களையும் காண முடிந்தது.
No comments:
Post a Comment