நீர்கொழும்பு தேர்தல்
தொகுதியில்; எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 27 ஆயிரத்து 899 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
நீர்கொழும்பு தேர்தல்
தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6213 ஆகும் (106213).
இவற்றில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின்
எண்ணிக்கை 80 ஆயிரத்து 353 (80353)ஆகும்.
செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 79482 ஆகும்.
இத் தொகுதியில்
மைத்திரிபால சிறிசேனவுக்கு 53331 வாக்குகளும் (67.1 வீதம்) ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்சவுக்கு 25432 வாக்குகளும் (32 சத வீதம்)
கிடைத்துள்ளன. நிராகரிக்கப்பட்ட வாக்குளின் எண்ணிக்கை 871 .
இதற்கமைய 27 ஆயிரத்து 899 மேலதிக வாக்குகளால் எதிரிணியின் பொது வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை, கட்டானை தேர்தல் தொகுதியிலும் மைத்திரிபால சிறிசேன 4152 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். கட்டானை
தேர்தல் தொகுதியில் மைத்திரிபால சிறிசேனவுக்கு 58507 வாக்குகளும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 54355 வாக்குகளும் கிடைத்துள்ளன.
நீர்கொழும்பு தேர்தல்
தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளர் மேல் மாகாண சபை உறுப்பினர்
ரொயிஸ் விஜித்த பெர்னாந்து ஆவார். கட்டானை தேர்தல் தொகுதியில்; சிறிலங்கா சுதந்திரக் கட்சி;யின்
பிரதான அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சணி பெர்னாந்து பிள்ளை
என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதும் நீர்கொழும்பு
மற்றும் கட்டானை தேர்தல் தொகுதிகளில்
ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment