நடைபெறவுள்ள பாராளுமன்ற
தேர்தலில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியிலிருந்து
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு
தேர்தல் தொகுதி அமைப்பாளரான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து கடந்த மாகாண சபை தேர்தலின் போது 28 ஆயிரம் மேலதிக வாக்குகளால்
ஐக்கிய தேசியக் கட்சியை நீர்கொழும்பு தேர்தல்
தொகுதியில் வெற்றிபெறச் செய்தார். இவர் நீர்கொழும்பு
மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்,
பின்னர் மேல்மாகாண சபை தேர்தலில்
போட்டியிட்ட வேளையில் கொள்ளைச சம்பவம் ஒன்று தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு
சிறைச்சாலையில் இருந்தபடி தேர்தலில் வெற்றிபெற்றார். இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்
இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment