நடந்து
முடிந்த பொதுத் தேர்தலின் போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொடிகளையும், பெனர்களையும்
பொலிஸார் அகற்றிய வேளையில் பொலிஸ்
உத்தியோகத்தர் ஒருவரை ஏசி அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான நீர்கொழும்பு
மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் சிறிலங்கா
சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சரத்குமார குணரத்ன கடந்த
வெள்ளிக்கிழமை (28) ஆஜரானார்.
தேர்தல்
காலத்தில் பொலிஸ் அதிகாரிக்கு வாய்மூல அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம்
தொடர்பாக வாய்மூல அறிக்கையை வழங்குவதற்காகவே பிரதி அமைச்சர் மன்றில் ஆஜரானார்.
சம்பவம் தொடர்பாக வாய்மூல அறிக்கையை
பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றின்
ஆஜராகுமாறு நீதிமன்றத்தினால்
உத்தரவு விடுக்கப்பட்டிருந்ததற்கு அமையவே அமைச்சர் மன்றில் இன்று ஆஜரானார்.
நடந்து
முடிந்த பொதுத் தேர்தலின் போது நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட பிரசாரக் கூட்டதிற்காக தேர்தல் சட்டவிதிகளை
மீறி நீர்கொழும்பு - கொழும்பு பிரதான
வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருந்த கொடிகளையும், பெனர்களையும் பொலிஸார் அகற்றிய போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஏசி அச்சுறுத்தல்
விடுத்ததாக பொலிஸாரினால் அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீர்கொழும்பு
பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே முன்னிலையில் பிரதி அமைச்சர் இன்று ஆஜரானபோது, பிரதி அமைச்சரை நீதவான் எச்சரித்து விடுதலை
செய்ததோடு, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாய்
மூல அறிக்கையை வழங்குமாறு
உத்தரவிட்டார். அத்துடன், அக்டோபர் மாதம் 16ஆம்
திகதி பிரதி அமைச்சரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment