ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று
காலை பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து நீர்கொழும்பு நகரின்
பெரும்பாலான இடங்களில் பட்டாசுக் கொளுத்தி
மக்கள் கொண்டாட்டத்தில்
ஈடுபட்டனர்.
நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் பிரதான நிகழ்வு
இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின்
நீர்கொழும்பு அமைப்பாளருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு வரவேற்பு
அளிக்கப்பட்டது. இவர் நடைப்பெற்று முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு
நீர்கொழும்பு தேர்தல் தொகுதியை 29589 மேலதிக வாக்குகளால்
வெற்றிபெறச் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி
உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பவர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment