Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, August 19, 2015

கம்பஹா மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் தோல்வி


 
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் தோல்வி அடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐவரும் இவ்வாறு தோல்வியை சந்தித்துள்ளனர். இவர்களில்   முன்னாள் பிரதி  அமைச்சர்களும் அடங்குகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரோ 63929 விருப்பு வாக்குகளைப் பெற்று  தனது கட்சியின்; சார்பில் பத்தாவது இடத்தைப் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.


 அதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந்திரகை; கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா ((43476  வாக்குகள்), சரத்குமார குணரத்ன (36477  வாக்குகள்),  பண்டு பண்டாரநாயக்க (42692 வாக்குகள்),  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான உபேக்ஸா சுவர்ணமாலி ((22689  வாக்குகள்) , ருவன் ரணதுங்க (49656 வாக்குகள்),   ஆகியோரும் இம்முறை தோல்வி அடைந்துள்ளனர்.

இதேவேளை,  ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்னாந்து 57013 விருப்பபு வாக்குகள் பெற்று 11 ஆவது இடத்தைப் பெற்று பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். ,  ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டானை அமைப்பாளர் சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்து 53779 வாக்குகள் பெற்று 12 ஆவது இடத்தைப்பெற்று தோல்வியடைந்துள்ளார்.,

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஸாபி ரஹீம் 33746 விருப்பு வாக்குகளைப்; பெற்று 16 ஆவது இடத்தை அடைந்து தோல்வியைச் சந்தித்துள்ளார்.
       







No comments:

Post a Comment