தனது மருத்துவச் செலவிற்காக தேவையான யூரோ
பணத்தை பெறுவதற்காக ஏழரை இலட்சம்
ரூபா பணத்தை வெளிநாட்டு நாணய பரிமாற்று நிலையம் ஒன்றுக்கு செலுத்திய பெண் ஒருவரை
ஏமாற்றிய அந்த நிலையத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார்
தெரிவித்தனர்.
வென்னப்புவ நகரில் அமைந்துள்ள வெளிநாட்டு நாணய பரிமாற்று நிலையமொன்றின்
உரிமையாளரான 52 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு
செய்யப்பட்டுள்ளவராவார்.
மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த
பெண்னொருவர் தனது மருத்துவச்
சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்காக தேவையான யூரோ பணத்தைப் பெற்றுக்
கொள்வதற்காக ஏழரை இலட்சம் ரூபா பணத்தை சந்தேக நபருக்கு கொடுத்துள்ளார். சந்தேக நபர்
அந்த பணத்திற்கு பெறுமதியான யூரோ பணத்தின் அரைவாசியையே அந்த பெண்ணுக்கு
வழங்கி ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பெண் பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் விசாரணை
மேற்கொண்ட பின்னர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment