Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, August 22, 2015

தனக்கு வாக்களித்த அனைவருக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் நன்றி தெரிவிப்பு

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும்  கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட   மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரi; மேலும் தெரிவித்ததாவது,
 இந்த தேர்தலில் எனக்கு 33 ஆயிரத்து 746 விருப்பு வாக்குகள் கிடைத்தன. பாராளுமன்றம் செல்ல வாய்ப்பபு கிடைக்காவிட்டாலும், இந்த மாவட்டத்தில் வசிக்கும் சகல இன மக்களும் எனக்கு வாக்களித்துள்ளதை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன. 2010 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில்  நான் போட்டியிட்டபோது 23122 விருப்பு வாக்குகள் கிடைத்தன. இந்த முறை நடந்த தேர்தலில்
மேலதிகமாக 10624 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.  மக்கள் மத்தியில் எனக்கு ஆதரவு அதிகரித்துள்ளதை இதுகாட்டுகிறது.

மேல்மாகாண சபையின் உறுப்பினராக நான்  மூன்றாவது முறையாகவும்   தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இந்த பதவி மூலமாக  மக்களுக்கு ஆற்றிவரும் சேவை காரணமாகவே இந்தத் தேர்தலில் எனக்கு விருப்பு வாக்குகள் அதிகரித்துள்ளன.
தற்போதுள்ள தேர்தல் முறையில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாக முடியாவிட்டாலும் இன, மத பிரதேச வேறுபாடுகள் பாராது எனது சேவை தொடரும். வாக்களித்த அனைவருக்கும்  கட்சியின் சார்பில் எனது நன்றிகள் உரித்தாகட்டும் என்றார்.


No comments:

Post a Comment