Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, August 23, 2015

வீடொன்றில் இயங்கி வந்த மதுபான தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது கட்டுவெல்லேகமயவில் சம்பவம்

மினுவாங்கொட கட்டுவெல்லேகம பிரதேசத்தில்  வீடொன்றில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம்  ஒன்றை சுற்றிவளைத்து  எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்களையும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார்   தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பு கடந்த  வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப்படும் மதுபானம் குறித்த வீட்டில்  குழிகள் தோண்டி பரல்களில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
. மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய  திருமணமான நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளவராவார்.


.;
 இந்த சுற்றிவளைப்பின்போது 10 பரல்கள், 21 ஆயிரம் கிராம்ஸ் சட்டவிரோத மதுபானம், 720 டிராம் மதுபான ஸ்பிரிட், மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட அடுப்பு,  எரிவாயு சிலின்டர், பானைகள் மற்றும் உபகரணங்களை  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உபபொலிஸ் பரிசோதகர் சாமர பிரதீப், பொலிஸ் உத்தியோகத்தர்களான அனுர, உபுல் பெரேரா, சிந்தக, ஜயசுந்தர, நிசாந்த ஆகியோரைக் கொண்ட குழவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment