Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, August 23, 2015

நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட அரசியல்வாதிகள் உட்பட யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது. - ரொயிஸ் பெர்னாந்து

நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட இனிமேல் அரசியல்வாதிகள் உட்பட யாருக்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் நகரில் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் ஐ.தே.க.வின் நீர்கொழும்பு அமைப்பாளரும்   மேல் மாகாண சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்னாந்து தெரிவித்தார்.
 கடந்த வெள்ளிக்கிழமை  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து
கொண்டு ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே ரொயிஸ் பெர்னாந்து மேற்சொன்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது.
அன்று நாட்டு மக்கள் தமக்கு விருப்பமான ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்து கொண்டனர். இன்று தமக்கு விருப்பமான சிரேஸ்ட அரசியல் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை பிரதமராகத்  தெரிவு செய்து கொண்டுள்ளனர். இதற்காக ஒவ்வொருவரும் பெருமைப்பட முடியும்.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறுவதற்கு நீர்கொழும்பு மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.  கிட்டத்தட்ட 30ஆயிரம் வாக்குவித்தியாசத்தில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்றதன் காரணமாவே கம்பஹா மாவட்டத்தை கைப்பற்ற முடிந்தது. ஆயினும்  நான் வெற்றிபெற முடியவில்லை என்ற கவலை எல்லோருக்கும் உள்ளது. இன்று இருப்பது பொது மக்களான உங்களது அரசாங்கம். நகர மக்களின் தேவைகளை இனிமேல் நான் நிறைவேற்றித் தருவேன்.

; நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் இதுவரைக் காலமும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட; அரசியல்வாதிகள் உட்பட எவருக்கும் இனிமேல் அதற்கு இடமளிக்கப்படமாட்டாது. நகரில் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்..ஐக்கிய தேசியக் கட்சயை எதிர்த்து வந்த, ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேனவுக்கு எதிராக செயற்பட்டு வந்த எமது பிலரேதச்து அரசியல்வாதி ஒருவர் தற்போது  அமைச்சர் பதவி ஒன்றை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.





No comments:

Post a Comment