முச்சக்கர
வண்டியின் மீது லொறி மோதியதில் ஏற்பட்ட வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில்
பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டள்ளனர்.
வென்னப்புவ நகர மத்தியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ ஹுல்ஹிட்டியாவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரும் 32 வயதுடைய ஆண் ஒருவருமே சம்பவத்தில்
படுகாயமடைந்தவர்களாவர்.
தும்மலசூரிய
பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி கோழிகளை ஏற்றிச்சென்று கொண்டிருந்த கென்டேனர் ரக லொறி முச்சக்கர வண்டி
மீது மொதி
இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரே திசையில் சென்று கொண்டிருந்த லொறி முச்சக்கர
வண்டியை முந்திச் செல்ல முயன்றவேளையில், முச்சக்கர
வண்டி இடது பக்கமாக திரும்ப முயன்ற போது இந்த விபத்து எற்பட்டுள்ளதாக வென்னப்புவ போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த
விபத்தின் போது முச்சக்கர முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயினும்
வண்டியில் பயணித்தவர்கள் காயங்களுடன் தெய்வாதீனமாகத் தப்பியுள்ளதாக பொலிஸார்
தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment