Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, November 8, 2015

துவிச்சக்கர வண்டி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக நீர்கொழும்பில் சைக்கிள் சவாரி

துவிச்சக்கர வண்டி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக எதிர் வரும் சனிக்கிழமை (14-11-2015) நீர்கொழும்பில் சைக்கிள் சவாரி ஒன்றை பெரகன் பெட்லஸ் சைக்கிள் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சைக்கிள் சவாரி தொடர்பாக  ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு  பெரியமுல்லையில் அமைந்துள்ள செனோரிச் ஓய்வு விடுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை சைக்கிளோட்ட கழகத்தின் தலைவர் வைத்தியர் அமால் ஹர்ச சில்வா, இலங்கை சைக்கிளோட்ட கழகத்தின் உப தலைவர்களான   நிஹால் குலசேகர, வில்மன் பெரேரா, நீர்கொழும்பு  பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் சுனில் ரணசிங்க பிராந்திய போக்குவரத்தப் பிரிவின் பொறுப்பதிகாரி கே.எம்.யு.
கஜநாயக்க. இலங்கையின் முன்னாள் தேசிய சைக்கிளோட்ட வீரர் பொனிபொஸ் பெரேரா, அனுசரணையாளர்  பிரசன்ன டயஸ் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.



எதிர்வரும் சனிக்கிழமை  காலை 8.30 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக சைக்கிள்; சவாரி ஆரம்பமாகவுள்ளது. இதில் சைக்கிளோட்ட வீரர்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில்  பணியாற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த வீரர்கள், சைக்கிள் சவாரியை விரும்புவோர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


இதில் கலந்து கொள்ள விரும்புவோர் அன்றைய தினம் காலை 7.45 மணிக்கு மாநகர சபைக்கு வரவேண்டும் எனவும்,  நீர்கொழும்பு நகரை சுற்றி; 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு  இந்த  சவாரி இடம்பெறும் எனவும் இலங்கை சைக்கிளோட்ட கழகத்தின் தலைவர் வைத்தியர் அமால் ஹர்ச சில்வா தெரிவித்தார்.

No comments:

Post a Comment