கல்வி
அமைச்சு சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் 'மகிழ்வான சிறுவர் உலகம் - பாதுகாப்பான எதிர்காலம்;'
எனும் தொனிப்பொருளில் 2-11-2015 துவக்கம்
9-11-2015 வரையான ஒரு வாரத்தை சிறுவர் பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
நீர்கொழும்பு
வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் இதனையிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு
செய்திருந்தது. இதன் ஒரு நிகழ்வாக மாணவர்கள் மத்தியில் 'மகிழ்வான சிறுவர் உலகம் - பாதுகாப்பான எதிர்காலம்;'
எனும் தொனிப்பொருளில் சித்திரப் போட்டி ஒன்றை நடத்தியது.
மாணவர்களும்
ஆசிரியர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சித்திரங்களை பார்வையிடுவதையும் சிறுவர்
சித்திரங்களையும் படங்களில் காணலாம்.






No comments:
Post a Comment