மோட்டார்
சைக்கிள் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த
நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அந்த நபர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (4) மலை 5.35 மணியளவில் சீதுவை
முத்துவாடிய பாலம் அருகில் இடம்பெற்றுள்ளது.
உதேல
வேலகே நலிந்த உதயகுமார (32 வயது) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.
மரணமடைந்த
நபர் மாதுவ, கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேரந்தவராவார்.
இவர் கட்டுநாயக்க, சீதுவை பிரதேச சபையின் ரத்தொழுகம பிரிவில் சாரதியாக பணியாற்றுபவராவா ர்.
சம்பவத்தில் இறந்த நபர் மோட்டார் சைக்களில் பயணித்துக்கொண்டிருக்கும்
போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத
நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு
தப்பிச் சென்றுள்ளார்.
சடலம் தற்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம்
தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை
இன்று முற்பகல் நீர்கொழும்பு மேலதிய நீதவான் சாந்த மிரிஹெல்ல கொலைச் சம்பவம் இடம்பெற்ற
இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
இச்சம்பவம்
தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லலை.பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment