நீர்கொழும்பு
பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா பாலர்
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு வெள்ளி விழா 'கலை விழா' ஞாயிற்றுக்கிழமை
(1-11-2015) மாலை அஹ்மதியா ஜுப்லி மண்டபத்தில்
நடைபெற்றது.
இலங்கை
அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவி
ரிஹானா தாரிக் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் தேசியத் தலைவர் நாசிர் அஹ்மத் விசேட
அதிதியாக் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கவிஞர் கலாநெஞ்சன் ஷாஜஹான் வாழ்த்துப் பா வாசித்தார்.
அஹ்மதியா பாலர் பாடசாலையின் பழைய
மாணவர் வைத்தியர் பயாஸ் அஹமத், தேசியத் தலைவர் நாசிர்
அஹமத் ஆகியோர் உரை நிகழத்தினர். மாணவர்களின்
கலை நிகழ்ச்சிகள் பல அங்கு இடம்பெற்றதுடன்
ஞாபகார்த்த சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.








No comments:
Post a Comment