Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, November 1, 2015

மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் 27 வயது இளைஞர் மரணம்: கட்டானை பத்தினிகொடல்லயில் சம்பவம்

மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த  லொறி மோதியதில் 27 வயது இளைஞர்  ஒருவர் மரணமாகியுள்ளார்.
 இச்சம்பவம் கட்டானை பத்தினிகொடல்லயில்  நேற்று சனிக்கிழமை (31) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ள
பத்தினிகொடல்ல ஹல்பே பிரதேசத்தைச் சேர்ந்த வித்தான பத்திரனலாகே அமில துவந்த  (27 வயது) என்ற நபரே சமபவத்தில் பலியானவராவார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
 சம்பவம் இடம்பெற்ற சனிக்கிழமை இரவு விபத்தில் மரணமான இளைஞர் மோட்டார் சைக்கிளில் நீர்கொழும்பு திசையை நோக்கிச் சென்றுள்ளார். இதன்போது மீரிகம திசையை நோக்கி வந்து
கொண்டிருந்த லொறிச் சாரதி, பத்தினிகொடல்ல பிரதேசத்தில் வைத்து,  தனது வீடு அமைந்துள்ள எதிர் பக்கமாக லொறியை திருப்பிய போது மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தை அடுத்து காயமடைந்த நபர்  அக்கரகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
லொறி சாரதியான  ஹல்பே, கட்டானை பிரதேசத்தைச் சேர்ந்த  ஜகத் சந்தன பெரேரா  ( 43 வயது) என்பவரை  கட்டானையில் வைத்து  பொலிஸார் கைது செய்துள்ளனர்.



No comments:

Post a Comment