ஐந்து
ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கான கள்ளக்; காதலுடன் இணைந்து கணவரை கைகுண்டு வீசி தாக்கி கொலை
செய்ய முயன்ற பெண்ணை நீர்கொழும்பு பொலிஸார்
நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு
ஸ்ரீ விக்ரமராஜசிங்க மாவத்தையைச் சேர்ந்த தென்னகோன் முதியான்ஸலாகே செர்மிளா லசன்தி
(42 வயது) என்ற பெண்ணே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக
நபராவார். கடந்த மூன்றாம் திகதி (3-1-2016) இரவு நீர்கொழும்பு குரணை பிரதேசத்தில் இடம்பெற்ற
கைகுண்டு வீச்சுத் தாக்குதலில் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டவர் சந்தேக நபரின் கணவரான கெலிஸ்டன் யூஜின் பெர்னாந்து (51 வயது) என்பவராவார்.
இச்சம்பவம்
தொடர்பாக பொலிஸாரின் மூலமாக மேலும் தெரிய
வருவதாவது
சந்தேக
நபரான பெண்ணும்; (தென்னகோன் முதியான்ஸலாகே செர்மிளா லசன்தி), அவரது கணவரும் அவர்களது இரண்டு பிள்ளைகளுடன் இத்தாலியில் தொலிலுக்காக சென்று வசித்து வந்துள்ளனர். அங்கு
வசி;க்கும் இலங்கையைச் சேர்ந்த ரவி சம்பத் என்ற
நபருடன் அவர்களுக்கு நெருங்கிய பழக்கம்
ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரான
பெண்ணுக்கும் ரவி சம்பத் என்பவருக்கும் இடையில் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அந்தக்
குடும்பத்தினர் இலங்கை திரும்பிய பிறகும் இந்தத் தொடர்பு தொடர்ந்துள்ளது. கைகுண்டு தாக்குதலுக்கு உள்ளான கணவருக்கு மாதம்பை பிரதேசத்தில் ஐந்து ஏக்கர் காணி ஒன்று
உள்ளது. அவர் காணிகளை விற்பனை செய்யும்
வர்த்தகராவார். அந்த காணியை அபகரிக்கும் நோக்கில் தனது கள்ளக் காதலனுடன் இணைந்து மனைவி
திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி இத்தாலியிலிருந்து ரவி சம்பத் இலங்கை
வந்துள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து
கணவனை கொலை செய்வதற்கு இரண்டு நபர்களுக்கு கொந்தராத்து வழங்கியள்ளனர். இரண்டு இலட்சம் ரூபா பணம், இரண்டு வீடுகள் , இத்தாலியில் தொழில் வாய்ப்பு என்பவைகளே அந்த
ஒப்பந்தமாகும்.
பிலியந்தல
பிரதேசத்தைச் சேர்ந்த சந்தன சமன், திவுலபிட்டடி, பட்டுவெல்லேகமை பிரதேசத்தைச் சேர்ந்த தனுஸ்க சத்துர
ஆகிய இரண்டு சந்தேக நபர்களுக்கே கணவனை கொலை செய்யும் கொந்தராத்து
வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக
நபர்கள் இருவரும் கணவனுக்கு சொந்தமான காணியில்
உள்ள மரங்கள் சிலவற்றைத் தரித்து (வெட்டி) அவற்றை தாங்கள் வாங்குதாக அவருடன் பேசியுள்ளதோடு ஒரு தொகை பணத்தையும்
முற்பணமாக வழங்கியுள்ளனர். மிகுதிப் பணத்தை வழங்குவதற்காக கட்டுநாயக்க, குரணை
பராக்கிரம வீதி அருகில் வருமாறு கூறியுள்ளனர.; அவ்வாறு பணத்தைப்
பெற்றுக் கொள்வதறகாக கடந்த மூன்றாம் திகதி இரவு வந்தபோதே மோட்டார் சைக்கிளில் வந்த
சந்தேக நபர்கள் இருவரும் கைகுண்டொன்றை கணவரின் மீது வீசி தாக்குதல் நடத்திவிட்டு
தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது காயமடைந்த கணவர்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கைகுண்டு வீச்சினால்
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டது.
சம்பவம்
இடம்பெற்ற அன்று (3-1-2016) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் சரீப் இலங்கைக்கு விஜயம்
ஒன்றை மேற்கொண்டிருந்தார். பாகிஸ்தான் பிரதமர் வருகை தந்த அன்று கட்டுநாயக்க விமான
நிலையம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அருகில் கைகுண்டு வீச்சு நடைபெற்றதை அடுத்து
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக பொலிஸார் மூன்று விசாரணைக் குழுக்களை
அமைத்தனர்.
நீர்கொழும்பு
பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரம, உதவி பொலிஸ்
அத்தியட்சகர் அசோக்க விஜேரத்ன, நீர்கொழும்பு பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி சமனதிலக்க வெலிவிட்ட ஆகியோரின் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து
கைகுண்டு வீச்சு தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஜி.எம்.சி.என். தனன் சூரிய முன்னலையில் ஆஜர் செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய
தினம் அடையாள அணிவகுப்பிற்கு
உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரான
பெண்ணை (மனைவி) தற்போது கைது
செய்துள்ளனர். அவரது இத்தாலி
காதலரான ரவி சம்பத் கைகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட அன்று இத்தாலிக்கு தப்பிச்
சென்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
- எம்.இஸட்.ஷாஜஹான்
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment