Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, February 14, 2016

ஒழுக்காற்று நடவடிக்கை எனக் கூறி கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவோர் செல்வதற்கு இடமொன்று வேண்டும். பழிவாங்கல்கள்; தொடர்வதற்கு இடமளிக்க முடியாது. - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

             
 சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலரை ஒழுக்காற்று நடவடிக்கை எனக் கூறி கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இன்று நடைபெறும் உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான கூட்டத்திற்கு   உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் 95 சதவீதத்தினர் வருகைத் தந்துள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை என்று கூறி இவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினால், இவர்கள் செல்வதற்கு ஒரு இடம் வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீர்கொழும்பு கொச்சிக்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ; ஹோட்டல் ஒன்றில் இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் சொன்னவாறு கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
சட்டவிரோத பொலிஸ் பிரிவொன்று  அமைக்கப்பட்டு எனது குடும்பத்தினரும்     சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பழிவாங்கப்படுகிறார்கள். இவ்வாறு பழிவாங்கல்கள்; தொடர்வதற்கு இடமளிக்க முடியாது. அந்த பொலிஸ் பிரிவு கலைக்கப்படாவிட்டால்   தொடர்ந்து அவர்களுடன் இருக்க முடியாது என்றார்.
இந்தக் கூட்டத்தில் சகல உள்ளுராட்சி மன்றங்களிலும்  சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானோர் வருகைத் தந்திருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார, டி.வி.குணசேகர, பவித்ரா வண்ணியாராச்சி, பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்னாந்து, ரோஹித்த அபே குணவர்தன, திணேஸ் குணவர்தன, ஜயந்த கெடகொட, உதய கம்மன்பில, கீதா குமாரசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்ஷ, சரத் குமார குணரத்ன, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடைசி  ஒரு மணித்தியாலத்தில் மாத்திரம் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.






- எம்.இஸட்.ஷாஜஹான்

No comments:

Post a Comment