சீதுவையில் ஓய்வு விடுதி என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார நிலையம் ஒன்றை சுற்றிவளைத்து அங்கு விபசாரத்தில் ஈடுபட்டதாகக்
சந்தேகிக்கப்படும் மூன்று பெண்களையும் ஓய்வு விடுதியின் முகாமையாளரான ஆண் ஒருவரையும் கடந்த
திங்கட்கிழமை (8) கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது
செய்யப்பட்ட பெண்கள் 20 முதல் 35 வயதுக்கு
உட்பட்டவர்களாவர். இவர்கள் இரத்தி;னபுரி, கொங்கதெனியாவ, பொல்பிட்டிகம ஆகிய பிரதேசங்களைச்
சேர்ந்தவர்களாவர். இவர்களில் ஒருவர் திருமணமாகாதவராவார்.
கட்டுநாயக்க
சுதந்திர வர்த்தக வலய ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிவதாக வீட்டாருக்கு தெரிவித்து விட்டு
சந்தேக நபர்களான பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சீதுவை
பிரதேசத்தில் குறித்த ஓய்வு விடுதியில் விபசாரம் இடம்பெற்று வருவதாக பிரதேசவாசிகளும்
, மதத்தலைவர்களும் பொலிஸாருக்கு செய் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பினை
தொடர்ந்து பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக
நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment