சயரோக
நோய் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும்
நடை பவணி ஒன்று இன்று சனிக்கிழமை (27)
காலை
நீர்கொழும்பில் இடம்பெற்றது
இலங்கை
தேசிய சயரோக சங்கத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற நடைபவணியின் ஆரம்ப நிகழ்வு நீர்கொழும்பு கடோல்கலே சரத்சந்திர குணரத்ன
விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
ஆரம்ப
நிகழ்வில் பிரதி அமைச்சர் சுதர்ஷணி பெர்னாந்து புள்ளே>சுகாதார சேவை பணிப்பாளர் பாலித்த மஹிபால>
இலங்கை தேசிய சயரோக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் தர்சன சிறிசேன> மற்றும் அதிகாரிகள் >
பாடசாலை மாணவர்கள் உட்பட மூவாயிரத்துக்கும்
அதிகமானோர்
லந்து கொண்டனர். நடைபவணியில் பங்குபற்றியோர் சயரோகம் தொடர்பான
பதாதைகளை ஏற்தியிருந்ததுடன் துண்டுப் பிரசுரங்களையும் பொது மக்களுக்கு
விநியோகித்தனர்.
சரத்சந்திர
குணரத்ன விளையாட்டரங்கில் ஆரம்பமான நடைபவணி சாந்த ஜோசப் வீதி, கொழும்பு- சிலாபம் பிரதான வீதி, நீர்கொழும்பு பிரதான வீதி வழியாக நீர்கொழும்பு ஆவேமரியா கல்லூரியை வந்தடைந்தது. அங்கு
மருத்துவ சிகிச்சை முகாம் இடம்பெற்றது.
No comments:
Post a Comment