புகல் வேளை
உணவின் பின்னர் பால் தேநீர் தயாரிக்க முயன்ற 11 வயதுச் சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக பலியாகியுளளான.;
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை (28-3-2016)
பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தங்கொட்டுவ
பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் ஆறில் கல்வி கற்கும் தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த மல்லிக ஆராச்சிகே செனால் தேசான பெரேரா என்ற சிறுவனே மின்சாரம் தாக்கி
பலியானவனாவான்.
சம்பவம்
தொடர்பாக மேலம் தெரிய வருவதாவது,
சிறுவனின
தந்தை மேசன் வேலை; செய்பவராவார். தாயார் வெளிநாடொன்றில் பணிப் பெண்ணாக தொழில் செய்பவராவார்
.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடுபத்தில் சிறுவன் இளையவனாவான். மற்றைய இரு பிள்ளைகளும்
ஆச்சியின் பொறுப்பில் உள்ளனர்.
சம்பவம்
இடம்பெற்ற அன்று தந்தை பகல் உணவுக்காக வீட்டுக்கு வந்துள்ளார். பாடசாலை முடிவடைந்து
வீட்டுக்கு வந்த மகனுடன் கதைத்து விட்டு தந்தை
மீண்டும் தொழிலுக்குச் சென்றுள்ளார். பகல்
உணவை உட்கொண்ட சிறுவன் பால் தேநீர்
அருந்துவதற்காக 'ஹீட்டரை' பயன்படுத்தி தண்ணீரை சூடாக்க முயற்சிக்கும் போது சிறுவனை மின்சாரம் தாக்கியுள்ளது.
சம்பவத்தை
அடுத்து உடனடியாக சிறுவன் தங்கொட்டுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் மரணமாகியுள்ளான்.
No comments:
Post a Comment