தங்கொட்டுவ –
புஞ்சம்பல பிரதேசத்தில் (கடந்த 11 ஆம்
திகதி ) வாகனமொன்றில் தீவைத்து படுகொலை செய்யப்பட்ட ஐந்து நபர்களின் பிரேத பரிசோதனை நேற்று திங்கட்கிழமை (14) நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின்
பிரேத அறையில் வைத்து நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டது..
இதன்போது அதில் ஒரு சடலம் நேவி கபில என்பவரது சடலம்
என அவரது மனைவியினால் அடையாளம் காணப்பட்டது. சத்திர சிகிச்சை ஒன்றின் காரணமாக நேவி
கபிலவுடைய இடது காலில் பொருத்தப்பட்டுள்ள அலுமினியத்
தகடு மற்றும் அவர் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியில் உள்ள பென்டன் என்பவற்றை வைத்து அவரது மனைவி கணவரை அடையாளம் காட்டினார்.
ஆயுதம் ஒன்றினால் நேவி கபிலவுடைய தலையில்
கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் கழுத்து. வயிறு, மார்பு பகுதிகளில்
கத்தியால் பல தடைவைகள் குத்தப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனையின் போது தெரிய வந்துள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் நேவி கபிலவுடைய சடலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் உறவினர்களிடம்
ஒப்படைக்க அனுமதியளிக்கப்பட்டது.
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment