Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, April 9, 2020

மீன்பிடி படகொன்றைத் திருடி எமில்டன் வாவி வழியாக பேலியாகொடைக்குச் சென்று மட்டக்குளியிலிருந்து ஹெரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக வாங்கி வந்த மூவர் நீர்கொழும்பு துங்கல்பிட்டி பொலிஸாரால் கைது


 ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் நீர்கொழும்பு களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகொன்றை திருடி அதில் களவாடப்பட்ட படகு எஞ்சின் ஒன்றைப் பொறுத்தி நீர்கொழும்பு எமில்டன் வாவி ஊடாக கொழும்பு பேலியாகொடை பெரிய பாலம் வரையில் சென்று போதைப் பொருளை  வாங்கி வந்த மூன்று நபர்களை நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த துங்கல்பிட்டிய பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளமை விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,


 சந்தேக நபர்கள் மூவரும் நீர்கொழும்பு களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகொன்றை திருடியுள்ளனர். அந்தப் படகிற்கு  தாங்கள் திருடிய  படகு எஞ்சின் ஒன்றைப் பொறுத்தியுள்ளனர். பின்னர்  நீர்கொழும்பு எமில்டன் வாவி வழியாக களனி கங்கைக்குச் சென்று அங்கிருந்து களனி பாலம் அருகிற்குச் சென்று  படகை நிறுத்தி வைத்துவிட்டு  மட்டக்குளியிலிருந்து போதைப் பொருளை  வாங்கியுள்ளனர். பின்னர் நீர்கொழம்புப் பகுதியில் விற்பனைச் செய்வதற்காக படகில்  கொண்டு வந்துள்ளனர். இதன்போதே பொலிஸார் சந்தேக நபர்களை போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.
 சந்தேக நபர்களில் இருவர் இளைஞர்களாவர். படகைச் செலுத்தியவர் நடுத்தர வயதுடையவராவார்.
  மூன்று சிறிய  பொதிகளில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் வைக்கப்டடிருந்தது. பன்னிரண்டரை கிராம் (12.5 கிராம்) போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்  ; தெரிவி;த்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment