சீதுவை
தவிசமர மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்தமைக்கு
எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும்
ஈடுபட்டதன் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் அரை மணித்தியாலத்திற்கு
மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.
தவிசமர
மகா வித்தியாலய அதிபரை திடீரென இடமாற்றல் செய்தமை அரசியல் பழிவாங்கல் என தெரிவித்தே
பெற்றோர்களில் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்திலும் பெரணியிலும் ஆடுபட்டனர். சீதுவை மங்சந்தியில்
ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் பின்னர் அங்கிருநது ஆறு கிலோமீற்றர் தூரத்திற்கு
பேரணியாக பயணித்து கொhழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் கட்டுநாயக்க பிரதேசத்தில்
அமைந்துள்ள
நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயம் வரை பேரணியாக வந்து வலயக் கல்விக் காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். அவர்கள் பாடசாலை அதிபருக்கு ஆதரவாகவும்,
இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்தும் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களின்
பிரதிநிதிகளுக்கும் நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளருக்கும் இடையே பேச்சுவார்ததை
நடத்தப்பட்டது. தவிசமர மகா வித்தியாலய அதிபருக்கு
எதிராக பல்வேறு குற்றச்சாட்டுககள் உள்ளதாகவும்
அதிபருக்க எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெறவுள்ளதாகவும், அவர் அந்த பாடசாலையில் தொடரநது
பணியாற்றுவது ஒழுக்காற்று விசாரணைக்கு தடையாக இருப்பதன் காரணமாக தற்காலிகமாக மேல் மாகாண
கல்வித்திணைக்களத்திற்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர்
இதன்போது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தை
கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் பாதுகாப்புப்
பணியில் ஈடுபட்டனர்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment