Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, March 6, 2016

'ஆரோக்கியமான வாழ்வை நோக்கி' எனும் தொனிப்பொருளில் நீர்கொழும்பில் சொற்பொழிவு

'ஆரோக்கியமான வாழ்வை நோக்கி' எனும் தொனிப்பொருளில் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13.6.2016) மாலை 4 மணி முதல் 6 மணி வரை சொற்பொழிவொன்று இடம்பெறவுள்ளது.
நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நீர்கொழும்பு முஸ்லிம் டாக்டர்களுடன் இனைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும்  கலந்து கொண்டு பயன்பெறுமாறு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை அழைப்புவிடுத்துள்ளது.
இருதய நோய், திடீர் மாரடைப்பு, நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்றோல், உயரத்திற்கு ஏற்ற நிறை போன்ற நோய்களில் இருந்து தம்மை தடுத்துக்கொள்வது எவ்வாறு? என்ற பட விளக்கங்களுடன் இருதய நோய் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் எம்.பி.எப். ரஹூமானின் விரிவுரை  இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment