Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, March 6, 2016

போதைப் பொருளுக்கு எதிராக சிறுவர் நடைபவனி

போதைப் பொருளுக்கு எதிராக சிறுவர் நடைபவனி என்ற தொனிப்பொருளில் கந்தானை புபுதுகமயில் அமைந்துள்ள கல்வாரி சிறுவர் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில்   கடந்த சனிக்கிழமை (05.03.2016) நடைபவனி ஒன்று புபுதுகமயில் இடம்பெற்றது.
போதைவஸ்த்து மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராகவும் இப்பிரச்னையிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் நோக்கில் பிரதேசத்தைச் சேர்ந்த  பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த  இந்த நடைபவனி இடம்பெற்றது. இதில் பங்கு பற்றிய சிறுவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்  வைத்தியர் நலின் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் சசிகுமார், மதத் தலைவர்கள். பிரதேச முக்கியஸ்த்தர்கள்;> பெற்றோர்கள். பொது மக்கள்  உட்பட  பலர் கலந்து கொண்டனர்.






- எம்.இஸட்.ஷாஜஹான்

No comments:

Post a Comment