கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய
மீரிஹகஹ பிரதேசத்தில் பட்டாசு தயாரிக்கும்
தொழிற்சாலையொன்றில் (15) நேற்று முற்பகல்
11.30 மணியளவில் இடம்பெற்ற வெடி விபத்தில் மூவர் மரணமாகியுள்ளனர்.
மட்டக்குளியைச் சேர்ந்த சுதர்ஸன் (22 வயது), பஸ்ஸர
பிரதேசத்தைச சேர்ந்த சூர்யா (21 வயது), பதுள்ளையச் சேர்ந்த சிவபாலன் (21 வயது) ஆகியோரே
சம்பவத்தில் பலியானவர்களாவர்.
சுரேஸ்
என்ற பெயருடைய பட்டாசு தொழிற்சாலையிலேயே இந்த
விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடிப்புச்
சத்தத்துடன் ஏற்பட்ட தீயை அடுத்து பட்டாசுத் தொழிற்சாலை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
தொழிற்சாலையில் வேலை செய்த குறித்த இளைஞர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே மரணமாகியள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின பிரேத அறையில்; வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம்
தொடர்பாக கட்டானை பொலிஸார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
- m.z. Shajahan
No comments:
Post a Comment