மேல்
மாகாண தமிழ் மொழி பாடசாலை அதிபர்களுக்கான நவீன
தொடர்பாடல் திறன் விருத்திச் செயலமர்வு
மேல்
மாகாண தமிழ் மொழி மூல பாடசாலை அதிபர்களுக்காக மேல் மாகாண கல்வித்திணைக்களத்தினால் ஏற்பாடு
செய்யப்பட்ட நவீன தொடர்பாடல் திறன் விருத்தி தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (17,
18) ஆகிய
தினங்களில் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பிரதான மண்டபத்தில்
நடைபெற்றது.
மேல்
மாகாண கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன, மேல்
மாகாண தமிழ் மொழிப் பிரிவிற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜி.பி. வசீர்தீன், மேல் மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஆர்.
உதயகுமார்,
ஏ.பி.எம். அலவி, மேல் மாகாண கணித பாடத்திற்கான பணிப்பாளர் திருமதி நயனா
பெரேரா, மாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் அதிபர் ஏ.எல்.எம். ஆலிப், தகவல்
தெடார்பாடல் தொழில்நுட்பப் பாட ஆசிரிய ஆலோசகர் பிரபாகரன், ஆகியோர் பல்வேறு தலைப்புக்களில் அதிபர்களுக்கு
விளக்கமளித்தனர்.
ஆசிரியை
ஹிமாஸா சப்ரான், ஆசிரியர் எம். நவ்சாத் ஆகியோர்
நவீன தொடர்பாடல் திறன் விருத்தி தொடர்பாகவும்
மின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்தல்; தொடர்பாகவும் விளக்கமளித்து அதுதொடர்பாக பயிற்சிகளை அதிபர்களுக்கு வழங்கினார்.
மேல்
மாகாண கல்விப் பணிப்பாளர் விமல் குணரத்ன, மேல்
மாகாண தமிழ் மொழிப் பிரிவிற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜி.பி. வசீர்தீன், மேல் மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஆர்.
உதயகுமார், ஏ.பி.எம். அலவி ஆகியோர் உரையாற்றுவதையும், ஆசிரியை ஹிமாஸா சப்ரான், ஆசிரியர்
எம். நவ்சாத் ஆகியோர் விளக்கமளிப்பதையும், கலந்து கொண்ட அதிபர்களையும் படங்களில் காணலாம்.
- எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment