மேல்மாகாண சபை
உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதி ஒதுக்கீட்டில்
போருதொட்ட பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுய தொழில் பயிற்சிப் பாட நெறியை
நிறைவு செய்த மாணவிகளின் திறமைக் கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் கடந்த சனிக்கிழமை (26-3-2016) நீர்கொழும்பு அல்-பலாஹ் முஸ்லிம் வித்தியாலய பிரதான மண்டபத்தில்
இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல்
மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹகீம்
கலந்து கொண்டார். சுமார் 3 மாத காலமாக நடைப்பெற்ற இப்பாட நெறி
கடந்த சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
இதன் போது
மாணவிகள் சிலருக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சான்றுதழ்களையும் வழங்குவதையும்
அருகில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீம், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஈஸான் ஆகியோர் நிற்பதையும்,
அமைச்சர் ரவூப் ஹக்கீம் சான்றுதழ்களையும்
வழங்குவதையும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீம் ஆகியோர் உரையாற்றுவதையம்
படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment