நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக்
கல்லூரியின் பழைய மாணவர் மன்றம் 12 ஆவது வருடமாக நடத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்
போட்டி ஞாயிற்றுக்கிழமை (3-4-2016) நீர்கொழும்பு கோட்டை மைதானத்தில் இடம்பெற்றது.
விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின் பழைய மாணவர்
மன்றத்தின் தலைவரும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சதீஸ் மோகன் தலைமையில் நடைபெற்ற
சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில்
விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின் காப்பாளர் திருமதி யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம்
பிரதம விருந்தினராகவும்,
தொழிலதிபர் பி. பரத் குமார் கௌரவ விருந்தினராகவும், விஜயரத்தினம்
இந்து மத்தியக் கல்லூரி அதிபர் என். புவனேஸ்வர ராஜா சிறப்பு விருந்தினராகவும் கலந்து
சிறப்பித்தனர்.
17 அணிகள் கலந்து கொண்ட இந்த சுற்றுப் போட்டி
ஐந்து ஒவர்களைக் கொண்டதாகவும் ஒரு அணியில்
ஆறு வீரர்களை கொண்டதாகவும் அமைந்தது. இறுதிப் போட்டி Aces அணியும் , இந்திர லோகத்தில் ஆறு அழகப்பர்
அணிக்கும் இடையில் நடைபெற்றது.
Aces அணி
இந்திர லோகத்தில் ஆறு அழகப்பர் அணி
விறுவிறுப்பாக நடைபெறற இறுதிப் போட்டியில் Aces அணி
வெற்றிப் பெற்று சாம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.
இந்த சுற்றுப் போட்டியின் சிறந்த வீரராக
Aces அணியைச் சேர்ந்த ரஸாத் தெரிவானார். இறுதிப்
போட்டியின் ஆட்ட நாயகனாகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் Aces அணியைச் சேர்ந்த பகீ தெரிவானார். சிறந்த
துடுப்பாட்ட வீரராக இந்திர லோகத்தில் ஆறு அழகப்பர் அணியைச் சேர்ந்த டிரோசன் தெரிவு
செய்யப்பட்டார்.
இறுதிப் போட்டியில் பெற்ற அணிக்கு Aces அணிக்கு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின்
காப்பாளர் திருமதி யோகேஸ்வரி ஜெயம் விஜயரத்தினம் வெற்றிக்கிண்ணத்தை வழங்கினார். அதிதிகள்
ஏனைய வீரர்களுக்கு உரிய பரிசில்களை வழங்கினர்.
No comments:
Post a Comment