சீனாவில் தயாரிக்கப்பட்ட நவீனரக
ரிவோல்வர்உட்பட நான்கு துப்பாக்கிகள் மற்றும் ரவைகளுடன் இரு சந்தேக நபர்களை கடந்த
வெள்ளிக்கிழமை (1-4-2016) இரவு 10.30 மணியளவில் கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் கைது
செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார்
தெரிவித்தனர்.
கிம்புலாபிட்டிய, லெம்ரோக்வத்தை, கல்மங்கட பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபர்
ஒருவரும், கிம்புலாபிட்டிய
விகாரை முன்பாகவுள்ள வீதியில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவருமே கைது
செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களாவர்.
பிரபல பாதாள உலகத்தைச் சேர்ந்த தலைவர்
ஒருவர் இந்த சட்டவிரோத ஆயுதங்களை குற்றச்
செயல்களுக்கு பயன்படுத்திவிட்டு, ஆயுதங்களை
பல்வேறு இடங்களில் மறைத்து வைத்துள்ளதாக தமக்குத் தகவல்
கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்து
தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
.
நீர்கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரமவின் ஆலோசனையின் பேரில், பிராந்திய
குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுபாஸ்
பிரியத்ரசன, பொலிஸ்
சார்ஜன்ட்களான சுதத் குணவர்தன, கொஸ்தா, ஹேரத், கான்ஸ்டபிள்களான
ஜயசூரிய, அஸ்நாயக்க, திசாநாயக்க, ஹப்புவிட்ட, விஜேரத்ன ஆகியோரைக் கொண்ட பொலிஸ் குழுவினர்
சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதோடு ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
No comments:
Post a Comment