Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, July 27, 2016

எமது நாட்டில் ஒரு நாளில் 66 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுகின்றனர். - சீதுவை பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரசிக லியனகே

எமது நாட்டில் ஒரு நாளில் 66 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுகின்றனர். கம்பஹா மாவட்டத்தில் கடந்த வருடத்தைவிட இந்த வருடத்தில் டெங்கினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. இந்த மாத்தில் மாத்திரம் சீதுவை சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் 60 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று  பிரதான சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர்  ரசிக லியனகே தெரிவித்தார்.

கட்டானை  கோட்ட பாடசாலை அதிபர்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கில்  'டெங்கில்லாத பாடசாலை' என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். இந்தக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (26) வலானை லக்ஷ்மி வித்தியாலய பிரதான மண்டபத்தில் கட்டானை கோட்டப் பணிப்பாளர் தலைமையில் நடைப்பெற்றது.


 பிரதான சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர்  ரசிக லியனகே  அங்கு தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது,
டெங்கு நுளம்புகளின் முட்டைகள் ஒரு வருட காலம்  அழியாமல் இருக்கக் கூடியது. இதன் காரணமாக டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் தொடர்பாகவும், அதனை அழிப்பது தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்த வேண்டும். டெங்கினால் உயிரிழப்பு ஏற்படுவதன் காரணமாக பல குடும்பங்களின் குடும்ப கட்டமைப்பு சீர்குழைந்துள்ளதை அவதானித்துள்ளோம். ஒருவரின் மரணம் குடும்பத்தையே பாதிக்கிறது. இதுவரையில்  162 பேர் சீதுவை சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பிரச்சினை தற்போது அரசியல் பிரச்சினையாகவும் மாறியுள்ளது. பாடசாலை அதிபர்கள் டெங்கு ஒழிப்பு தொடர்பாக பூரண பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.







No comments:

Post a Comment